உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிமதுரை: யாதவர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முதல்வர் ராஜூ தலைமையில் நடந்தது. ஆட்சிக் குழுத் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், செயலாளர் கண்ணன், இணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல், உறுப்பினர்கள் மணிச்செல்வம், செந்தில் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன் கல்லுாரி செயல்பாடு, மாணவர்கள் எதிர்காலம் குறித்து பேசினார். இயக்குநர் ராஜகோபால் வரவேற்றார். பாடத்திட்ட குழுத் தலைவர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுதிருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் தின சொற்பொழிவு நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை சுற்றுச்சூழல் தொலை உணரி, வரைபடவியல் துறை பேராசிரியர் மனோன்மணி பேசினார். கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராம சுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர். துறைத் தலைவர் கோபிமணிவண்ணன் தொகுத்துரைத்தார். மாணவி ஜெய்கீர்த்திகா வரவேற்றார். உதவி பேராசிரியர் ரோகிணி ஒருங்கிணைத்தார். மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.இலவச நோட்டுகள் வழங்கல்திருப்பரங்குன்றம்: நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருநகர் ஜயண்ட்ஸ் குரூப் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மெரிலா ஜெயந்தி அமுதா தலைமை வகித்தார். கவுன்சிலர் இந்திராகாந்தி வழங்கினார். நிர்வாகிகள் நடராஜன், நாகராஜன், மரகதசுந்தரம், ரங்கராஜன், அய்யர், கிருஷ்ணசாமி, குருசாமி கலந்து கொண்டனர்.கற்றல் பொருட்கள் வழங்கல்மதுரை: திருஞானம் துவக்கப் பள்ளியில் கற்கை நன்று அமைப்பு சார்பில் இலவச கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்த அமைப்பு நிர்வாகி இனியன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார். அமைப்பு நிர்வாகிகள் நாகவெங்கடேசன், கீர்த்திகா, குமரகண்ணன் ஆகியோர் பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், பென்சில், வாட்டர் கேன் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினர். பள்ளி செயலாளர் சங்கீத்ராஜ் அமைப்பு செயல்பாடுகளை பாராட்டி பேசினார். மாணவர் மன்ற தலைவர் மதுமிதா நன்றி கூறினார்.புத்தாக்க பயிற்சிமதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி (ஆற்றுப்படுத்துதல்) செயலாளர் சுந்தர் தலைமையில் நடந்தது. முதல்வர் ராமமூர்த்தி வரவேற்றார். பொருளாளர் நல்லதம்பி, துணை முதல்வர் செல்வமலர், இயக்குநர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். நாடார் மஹாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் பேசினார். ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் துணைத் தலைவர் ராஜமூர்த்தி 'மாணவர்கள் நேர்மையான செயல்பாடுகளுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்' என்றார். பிரபஞ்சா அறக்கட்டளை நிறுவனர் கலாவதி தன்னம்பிக்கை தொடர்பாக பேசினார். பி.ஆர்.ஓ., பிரெட்ரிக், ஒருங்கிணைப்பாளர் பூரண செல்வன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை