உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்தி

பள்ளி, கல்லுாரி செய்தி

வேலைவாய்ப்பு திறன்

மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் முதுகலை பொருளாதார ஆராய்ச்சித் துறை, கேன் எச்.ஆர்., நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு திறன்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. துறைத் தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார். மாணவி சண்முக லாவண்யா வரவேற்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிக்கோலஸ் பிரான்சிஸ் வேலைவாய்ப்புக்கும் வாழ்க்கை தொழிலுக்கும் உண்டான வேறுபாடு, அதன் நன்மைகள் குறித்து பேசினார். மாணவி நஸ்ரின் நன்றி கூறினார்.'டெக் மீட்' நிகழ்ச்சிமதுரை: பாத்திமா கல்லுாரியில் கல்லுாரிகளுக்கு இடையேயான 'டெக் மீட்' நிகழ்ச்சி கணினி அறிவியல் துறை சார்பில் நடந்தது. துறைத் தலைவர் வித்யா தலைமை வகித்தார். முதுகலை கழக கணினி அறிவியல் தலைவர் விபில் வரவேற்றார். குஜராத்தின் இன்டச் காம்போசிட் டெக்னாலஜி இயக்குனர் பேசுகையில், ''நல்ல பழக்கவழக்கங்களே உங்களது நடத்தையை தீர்மானிக்கும். ஐ.க்யூ., எவ்வளவு முக்கியமோ அதைவிட இ.க்யூ., என்னும் 'எமோஷனல் க்வோஷன்ட்' முக்கியம். சந்தோஷம், துக்கம், கோபம் உள்ளிட்டவை இ.க்யூ.,வில் அடங்கும். அது நபருக்கு நபர் மாறுபடும். சோம்பேறித்தனம், காரியங்களை தள்ளிப்போடுதல் வெற்றியை தள்ளிப்போட்டுவிடும்'' என்றார். காகித விளக்கக்காட்சி, வினாடி வினா, டெக் மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. 24 கல்லுாரிகளின் 310 மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில் மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் தீபா பேசினார். இளங்கலை கழக கணினி அறிவியல் தலைவர் கீர்த்தனா நன்றி கூறினார்.துவக்க விழாமதுரை: பரவை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் இறையன்பு பொறியியலின் முக்கியத்துவம், பொறியாளர்களின் பங்களிப்புகள், மாணவர்களின் கடமை, எதிர்கால திட்டமிடல்கள், பெற்றோர், ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.தாய்ப்பால் வார விழாபெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் வலையங்குளத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. வட்டார தலைமை மருத்துவர் தனசேகர் தலைமை வகித்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம், 2 ஆண்டுகளுக்கு குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முதல்வர் சந்திரன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஏற்பாடுகள் செய்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு பேரீச்சை பழங்கள் வழங்கப்பட்டது.கலை இலக்கிய போட்டிகள்மதுரை: புதுார் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உமறுப்புலவர் தமிழ் இலக்கிய மன்றம், மதுரை நகைச்சுவை மன்றம், மாவட்ட தமிழியக்கம் சார்பில் கலை இலக்கியப் போட்டிகள் மன்றம் ஒருங்கிணைப்பாளர் இஸ்மத்துல்லா தலைமையில் நடந்தது. தமிழியக்க மாவட்ட செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக்நபி வரவேற்றார். வழக்கறிஞர் அமிர்தராஜ், உதவி தலைமையாசிரியர் ஜாகிர்உசேன், ஆசிரியர் அபுதாஹிர் பேசினர். மாணவர்கள் முகமது ஹாரூன், அப்துல் ரஹ்மான், ராஜஹரிஹரன், சிவகார்த்திக் ஆகியோர் கவிதை வாசித்தனர். பேச்சு, கட்டுரை, சிலம்பம் போட்டிகள் நடந்தன. ஆசிரியர்கள் நுாருல்லா, தவுபீக் ராஜா, பஷீர், ஷெரீப் அலி, அல்ஹாஜ் முகமது, சண்முகசுந்தரம், மாலிக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். உதவி தலைமையாசிரியர் ரகமத்துல்லா நன்றி கூறினார்.கருத்தரங்குமதுரை: லேடி டோக் கல்லுாரியில் விலங்கியல் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் 'அறிவுசார் சொத்துரிமை, உயிரியல் நெறிமுறைகள்' தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இணை பேராசிரியர் பிரியதர்ஷினி வரவேற்றார். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ துவக்கி வைத்தார். இணை பேராசிரியர் ராணி, டாக்டர் ஆசீர்வாதம், சென்னை காப்புரிமை அலுவலக துணைக் கட்டுப்பாட்டாளர் பானுமதி பேசினர்.பயிற்சி பட்டறைமதுரை: கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மடிப்பு நோக்கி (போல்டு ஸ்கோப்) தயாரிப்பு பயிற்சி பட்டறை தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஈடன் அறிவியல் மைய இயக்குனர் பாண்டியராஜன், ஆசிரியர் சிவராமன் மடிப்பு நோக்கி தயாரிக்கும் முறை, பயன்பாடு குறித்து விளக்கினர். 50க்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிப்பு நோக்கி வழங்கப்பட்டது. ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி