| ADDED : ஜூலை 20, 2024 01:08 AM
தேசிய தினவிழாமதுரை: லேடி டோக் கல்லுாரி பிரெஞ்சு துறை சார்பில் பிரெஞ்சு தேசிய தினவிழா துறைத் தலைவர் சான்டோ மிஷ்லின் சங்கீதா தலைமையில் கொண்டாடப்பட்டது. பிரெஞ்ச் புரட்சி, பாஸ்ட்டில் தினம் குறித்து தேர்வாணையர் மெர்சி பாக்கியம் பேசினார். மாணவிகளின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியை வாலன்டினா பவர்ஸ் நன்றி கூறினார்.கலந்துரையாடல்மதுரை: அம்பிகா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி கலந்துரையாடல் தாளாளர் கனகாம்பாள் தலைமையில் நடந்தது. முதல்வர் சரளா தேம்பாவணி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் மீனலோசினி, பாத்திமா கல்லுாரி பேராசிரியை சாய்ரா பானு, காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாண்டி ஆகியோர் ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வு, புதிய மாணவிகள் கற்றல் திறன், இளைஞர்களை மேம்படுத்துவதில் என்.எஸ்.எஸ்., பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் மாணவிகள் கலந்துரையாடினர். பேராசிரியைகள் முகில், வர்ஷினி, சிந்து, தங்கதர்ஷினி ஒருங்கிணைத்தனர்.விழிப்புணர்வு நிகழ்ச்சிதிருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை காம்கேப்ஸ் சங்கம் சார்பில் வணிகவியல் பற்றிய அறிக்கை சமர்ப்பித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவர் லோகேஷ் வரவேற்றார். இளங்கலை 2ம் ஆண்டு மாணவர்கள் வணிகவியல் தொடர்பான கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தனர். மாணவர் ரியாஸ் அகமத் நன்றி கூறினார். துறைத் தலைவர் நாகசுவாதி ஒருங்கிணைத்தார். உதவிப் பேராசிரியர்கள் ராஜாமணி, பிரபா, தினேஷ்குமார் ஏற்பாடுகள் செய்தனர்.புரிந்துணர்வு ஒப்பந்தம்மதுரை: யாதவர் கல்லுாரி வணிகவியல் உயராய்வு மையம், பத்மராஜம் மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் வணிகவியல் தொடர்பான பட்டயப்படிப்புகளை ஊக்குவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. செயலாளர் கண்ணன், முதல்வர் ராஜூ முன்னிலை வகித்தனர். மும்பை ஏ.சி.சி.ஏ., வணிக தொடர்பு அதிகாரி ராய்ஸ்டன் கோபால் பேசினார். பேராசிரியர்கள் ராஜகோபால், பாலசுப்பிரமணியம், உதயகுமார் ஏற்பாடு செய்தனர்.