உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சீரமைப்பரா செல்லுார் ஓடைப்பாலத்தை

சீரமைப்பரா செல்லுார் ஓடைப்பாலத்தை

மதுரை : மதுரை செல்லுார் - - குலமங்கலம் மெயின் ரோட்டில், மீனாம்பாள்புரம் அருகே கண்மாயையொட்டி ஓடைப்பாலம் உள்ளது. இதன் அடியில் பல நாட்களாக குப்பை கொட்டப்பட்டு அவ்வப்போது எரிக்கப்படுகிறது. பாலமும் வலுவிழந்துஉள்ளது.பாதாள சாக்கடை பணியில் மண்அள்ளும் வாகனம் ஈடுபட்டிருந்தபோது பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்தது. இதனால் 'எப்ப விழுமோ' என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பாலம் வழியாக மீனாம்பாள்புரம், ஆலங்குளம், குலமங்கலம் பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க வேண்டும். குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன அபுபக்கர் உள்ளிட்டோர் மாநகராட்சியை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை