உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலை கொடுப்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்: எஸ்.எல்.சி.எஸ்., பட்டமளிப்பு விழாவில் ஆச்சி குழும நிறுவனர் பத்மசிங் ஐசக் பேச்சு 

வேலை கொடுப்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்: எஸ்.எல்.சி.எஸ்., பட்டமளிப்பு விழாவில் ஆச்சி குழும நிறுவனர் பத்மசிங் ஐசக் பேச்சு 

மதுரை : வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) 25வது பட்டமளிப்பு விழாவில் ஆச்சி குழும நிறுவனர் பத்மசிங் ஐசக் பேசினார்.இவ்விழாவை கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில் மாணவர்கள் படிக்கும்போதே கல்வியுடன் பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். சிறந்த எதிர்கால இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.மாணவர்களுக்கு பட்டம் வழங்கி ஆச்சி குழும நிறுவனர் பத்மசிங் ஐசக் பேசியதாவது: 'முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு' என்பதை மாணவர்கள் மனதில் பதித்து வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எதிர்கால தேவைக்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொழில் வாய்ப்புகள் இங்கே ஏராளமாக உள்ளன. படித்து முடித்தவுடன் வேலை தேடுபவராக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக வேண்டும். அதற்காக தொழில் துவங்குவதில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.எந்த வேலையை செய்தாலும் ரசித்து செய்ய வேண்டும். வெற்றி தானாக வந்து சேரும். மாணவர்களாகிய நீங்கள் எடுக்கும் முயற்சி, கற்கும் கல்வி, அதில் கடைபிடிக்கும் நேர்மை இவையே உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும். ஒவ்வொரு மாணவர்களுக்கு உள்ளேயும் ஒரு தொழில்முனைவோர் உள்ளார். அதைக் கண்டறிந்து சாதிக்க வேண்டும். சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொண்டால் உலகளாவிய வெற்றியை பெறலாம் என்றார்.கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார், துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, தேர்வாணையர் ஜெர்லின்ரூபா, துறைத் தலைவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். முதல்வர் சுஜாதா வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி