உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்., அலுவலகத்தில் வாசன் பேனர் கிழிப்பு; உரிமை கோருவதில் மோதல்

காங்., அலுவலகத்தில் வாசன் பேனர் கிழிப்பு; உரிமை கோருவதில் மோதல்

மதுரை : மதுரை புதுாரில் உள்ள காங்., அலுவலகத்தில் கொடியேற்ற முயன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது அங்குஇருந்த வாசன் பேனரை காங்., கட்சியினர் கிழித்தனர்.புதுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே 'தீன் மூர்த்தி பவன் வாசக சாலை' உள்ளது. இதை மறைந்த முன்னாள்நிர்வாகி வடிவேல் உள்ளிட்டோர் பராமரித்து வந்தனர். த.மா.கா., பிரிந்தபோது நிர்வாகிகள் பலர் மாறினர். இதனால் காங்., த.மா.கா., என இருதரப்பிலும் இந்த அலுவலகத்தை உரிமை கொண்டாடினர். தற்போது த.மா.கா.,வில் இருந்த சிலர் மீண்டும் காங்.,க்கு மாறினர்.இந்நிலையில் காங்., நகர் தலைவர் கார்த்திகேயன்தலைமையில் அங்கு கொடியேற்ற முயன்றனர். அதற்கு வடிவேலுவின் மனைவி சரஸ்வதி தரப்பில் போலீஸ் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனால் காங்., கொடியேற்ற போலீஸ் தரப்பில்அனுமதி மறுத்தனர். சரஸ்வதி தரப்பிற்கு ஆதரவாக த.மா.கா., மாவட்ட தலைவர்கள் ராஜாங்கம், நடராஜன், மணி தலைமையில் அக்கட்சியினர் அங்கு கூடினர். இதனால் காங்., - த.மா.கா.,வுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.எதிர்ப்பை மீறி காங்கிரசார் கொடியேற்றினர். இதில் அங்கிருந்த வாசன் பேனர் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.கார்த்திகேயன் கூறுகையில், அந்த அலுவலகஉரிமை காங்.,க்கு தான் உள்ளது என்றார். த.மா.கா., தலைவர் ராஜாங்கம் கூறுகையில், வடிவேல் குடும்பத்தினர் அதற்கு உரிமை கோரியுள்ளனர். தற்போது யாருக்கு அந்த அலுவலகம்என கேள்வி எழுந்ததால்பூட்டப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பின் தெரியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை