உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடியுடன் பொழிந்த மழை

இடியுடன் பொழிந்த மழை

பாலமேடு: பாலமேடு பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று இடியுடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. வாடிப்பட்டி பகுதியில் பலத்த காற்று மட்டுமே வீசியது. எல்லையூர் கரடிக்கல் மலை அடிவார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. சில நாட்களாக அனல் பறந்த நிலையில், நேற்று மழை பொழிந்து வெப்ப சூழலை மாற்றியதால் மக்கள் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை