உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி -/ ஆக.14 

இன்றைய நிகழ்ச்சி -/ ஆக.14 

கோயில்ஆடிமுளைக்கொட்டு திருவிழா - கனக தண்டியல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.முளைப்பாரி ஊர்வலம்: நாகம்மாள் கோயில், மேலுார், மாலை 5:00 மணி, புஷ்பதேர் ஊர்வலம், இரவு 8:00 மணி.ஆடித் திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், பாலம் ஸ்டேஷன் ரோடு, செல்லுார், மதுரை, முளைப்பாரி ஊர்வலம், மாலை 6:00 மணி.83ம் ஆண்டு உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை, பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.வேதபாராயணம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, காலை 9:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த் லோசனன்சாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணிபொதுமதுரை தமிழ் இசை சங்க பொன்விழா - ராஜா முத்தையாவின் 120வது பிறந்த நாள் விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, சென்னை கவிதா கலாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளின் 'அரி' அவதாரமும், 'அரன்' சிங்காரமும் - நாட்டிய நாடகம், நட்டுவாங்கம் -- கவிதா, பாட்டு -- சமயகுமார், வயலின் - - ஜெகதீசன், மிருதங்கம் -- கோகுல்நாத், சிறப்பு சப்தம் - ஜெயகாந்தன், மாலை 5:15 மணி, குரலிசை -- நித்யஸ்ரீ மகாதேவன், வயலின் -- கிருஷ்ணசாமி, மிருதங்கம் -- மோகனராமன், மோர்சிங் - - தீனதயாளு, மாலை 6:45 மணி.'சிட்கான்' வர்த்தக கருத்தரங்கம், மாநாடு, கண்காட்சி: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: கோபுர்கல் டெக்னாலஜீஸ் நிறுவனர் குமார் வேம்பு, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 4:00 மணி.பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததற்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத பாஜ., வை கண்டித்தும் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: முனிச்சாலை, மதுரை, தலைமை: எம்.எல்.ஏ., பூமிநாதன், காலை 10:00 மணி. மறையும் கதிரவனின் கடைசி நிழல் - கவிதை நுால் வெளியீட்டு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் அவ்வை அருள், நுால் வெளியிடுபவர்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட தலைவர் செல்லா, பெறுபவர்: டாக்டர் செல்வராணி, காலை 10:00 மணி.ரத்ததான முகாம்: டே அண்ட் நைட் உள்விளையாட்டு மைதானம், துரைச்சாமி நகர், மதுரை, ஏற்பாடு: மதுரை 11 கிரிக்கெட் பேமிலி, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: செல்லத்தம்மன் கோயில் காவடிச் சந்து, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், புதுநத்தம் ரோடு, மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: கனரா வங்கி, காலை 11:00 மணி.சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தத்தனேரி, முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி, பெத்தானியபுரம், மேட்டுத்தெரு, மதுரை, தலைமை: அகில பாரத ஐயப்பா சேவா சங்க தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன், குரு தியேட்டர் கிளை தலைவர் வெள்ளியம்பலம், காலை 10:00 மணிபள்ளி, கல்லுாரிதேசிய நுாலகம், நுாலகர் தின் விழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை நுாலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் சுரேஷ், காலை 10:30 மணி.போதை ஒழிப்பு குறித்த மாணவர்களுக்கான நெறிப்படுத்துதல்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: செஞ்சுருள் சங்கம், நேரு யுவகேந்தரா, காலை 10:30 மணி.வணிகம் அறிவு பொருளாதாரம் குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: டில்லி கோஷி, கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ஏற்பாடு: பொருளாதாரத் துறை, காலை 11:15 மணி.தேசப் பிரிவினை பெருந்துயர் நினைவு தினம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: காந்தி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், தலைமை: கல்லுாரி முதல்வர் தேன்மொழி, ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:00 மணி.சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பேரணி: பாத்திமா மகளிர் கல்லுாரி, மதுரை, காலை 8:30 மணி. புத்தாக்க பயிற்சி: சவுராஷ்டிர கல்லுாரி, விளாச்சேரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் சீனிவாசன், பேசுபவர்: தாளாளர் குமரேஷ், காலை 10:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை