| ADDED : மார் 28, 2024 06:32 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 28) திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் ஜி.எஸ்.டி. ரோடு வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும்.மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்ல அனுமதி இல்லை.இவ்வாகனங்கள் மூட்டா தோட்டத்திலிருந்து ஜி.எஸ்.டி., ரோடு வழியாக திருநகர் செல்ல வேண்டும். திருநகரிலிருந்து கோயிலுக்கு வரும் வாகனங்கள் பூங்கா பஸ் ஸ்டாப் அருகே காலி இடத்திலும், தெப்பக்குளம் கட்டண 'பார்க்கிங்'கிலும் நிறுத்த வேண்டும். மதுரையிலிருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள் ஒக்கலிகர் மண்டபம் அருகிலுள்ள தெப்பக்குளம் கட்டணம் 'பார்க்கிங்'கிலும், டூவீலர்களை ஆர்ச் முதல் மயில் மண்டபம் வரை ரோட்டின் இருபுறமும் நிறுத்த வேண்டும்.மயில் மண்டபத்திலிருந்து ரத வீதிகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.அனியாபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் சரவணப் பொய்கையில் நிறுத்த வேண்டும். அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் ரோடு வழியாக நிலையூர், திருநகர் செல்லக்கூடிய இலகு ரக வாகனங்கள் கே.வி. பள்ளியின் வலது புறம் திரும்பி தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு வழியாக ஜி.எஸ்.டி., ரோடு செல்ல வேண்டும்.இந்த ரோடு வழியாக வரும் கனரக வாகனங்கள் அவனியாபுரம், முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.கோயிலுக்கு வரும் அரசு வாகனங்கள் அருணகிரி திருமண மண்டபம் அருகே நிறுத்த வேண்டும். மதுரையில் இருந்து வரும் டூவீலர்கள் ஆர்ச் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நிறுத்த வேண்டும்.ஹார்விபட்டி, நிலையூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நிலையூர் சந்திப்பு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நிறுத்த வேண்டும்.