உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள்

மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள்

மதுரை, : மதுரையில் தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வரை மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (ஜூலை 1) முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.பெரியார் பஸ் ஸ்டாண்டு செல்லுார் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம்.லாட்ஜ், இ2, இ2 ரோடு, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்ணன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, ஐ.ஒ.சி ரவுண்டான வழியாக நத்தம் ரோடு, அழகர்கோவில், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் வந்து வலதுபுறம் திரும்பி நார்த் கேட், தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏ.வி. பாலம் செல்ல வேண்டும். இருசக்கர இலகுரக வாகனங்கள் மட்டும் காந்தி மியூசியம் வழியாக வள்ளுவர் சிலையை அடையலாம்.மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் 80 அடிசாலை, ஆவின் சந்திப்பு, ஆசாரித்தோப்பு சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லுார் ரவுண்டான, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.நத்தம், அழகர்கோவில் ரோடு வழியாக ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கனரக, வணிக பயன்பாட்டு வாகனங்கள் அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் 80 அடி ரோடு, ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு, கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி பாலம் வழியாக கீழவெளிவீதி, யானைக்கல், வடக்குமாரட் வீதி செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ