உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதயகுமாரின் தந்தை நினைவு தினம்

உதயகுமாரின் தந்தை நினைவு தினம்

திருமங்கலம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தந்தை போஸ் தேவரின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் டி.குன்னத்துார் நினைவு இடத்தில் நடந்தது. உதயகுமார், சகோதரர் நடிகர் யோகேஸ்வரன், அம்மா மீனாள், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் பிரியதர்ஷினி, தாமரைச்செல்வி, தனலட்சுமி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடந்த அன்னதானத்தை உதயகுமார், டிரஸ்ட் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், மகேந்திரன், தமிழரசன், நீதிபதி, மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன், ராஜா, ஜெ., பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை