உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருவிளக்கு பிரச்னைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு

தெருவிளக்கு பிரச்னைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு

திருநகர் : திருப்பரங்குன்றம் கிரிவல ரோடு, திருநகர், எஸ்.ஆர்.வி. நகர், நெல்லையப்பபுரம் பகுதிகளில் தினம் ஏதாவது ஒரு தெருவில் விளக்குகள் எரிவதில்லை. பொதுமக்கள், கவுன்சிலர்களிடம் முறையிடுகின்றனர். அவர்கள் ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்கின்றனர். அப்படி இருந்தும் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக தெருவிளக்குகள் எரிவதில்லை.கேபிள், குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டிய பள்ளங்களை முழுமையாக மூடவில்லை. குண்டும் குழியுமாக உள்ளன. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.மாநகராட்சி மண்டல கூட்டம், குறைதீர் கூட்டங்களில், கவுன்சிலர்கள் புகார் கூறியும் நிரந்தர தீர்வு இல்லை. மேயர், கமிஷனர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ