உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25 வளர்ச்சி திட்டங்கள் எம்.பி.,யிடம் எதிர்பார்ப்பு

25 வளர்ச்சி திட்டங்கள் எம்.பி.,யிடம் எதிர்பார்ப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரியில் தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மைய உறுப்பினர் செயலர் ஜெயராமன் வரவேற்றார்.எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், கல்லுாரி முதல்வர் ஜோதிராஜன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் இளமகிழன், பாரதிய பா.பி., முருகன்ஜி, பெரீஸ் மகேந்திரவேல், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உசிலம்பட்டி தொகுதியில் கிடப்பில் உள்ள திட்டங்கள், செய்ய வேண்டிய பணிகள் உட்பட 25 வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி., முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை