| ADDED : நவ 18, 2025 04:19 AM
மதுரை: மதுரையில் முதியவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வளர்ப்பு மகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆனையூர் கணபதிநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி 65. இவர் மகள், அவரது கணவருடன் குடும்ப பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, பழனிசாமி கீழே விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கூடல்புதுார் போலீசார் விசாரித்தபோது தகராறில் பழனிசாமி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. போலீசார் கூறியதாவது: பழனிசாமியின் வளர்ப்பு மகள் சித்ரா 25. இவரது கணவர் சரத். உறவினர் விஜய். இவர்களில் சித்ராவுக்கும், பழனிசாமியின் மனைவிக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில் சித்ராவை வளர்த்ததற்காக செலவிட்ட தொகையை திருப்பித்தர வேண்டும் என பழனிசாமி தரப்பு வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டது. இந்தச் சண்டையில் தள்ளிவிட்டதில் பழனிசாமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக சித்ரா, சரத், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.