உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.667 கோடியில் திட்டப்பணிகள் மாநகராட்சி மேயர் தகவல்

ரூ.667 கோடியில் திட்டப்பணிகள் மாநகராட்சி மேயர் தகவல்

மதுரை : மதுரை மாநகராட்சியில் இரண்டு ஆண்டுகளில் ரூ.667.57 கோடியில் 6 ஆயிரத்து 222 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாநகராட்சியில் 2022 முதல் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு, திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றன. 100 வார்டுகளிலும் ரூ.381.68 கோடியில் 643 கி.மீ., துாரத்தில் 3,861 ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.மண்டலம் 1ல் ரோடுகள், 72 கட்டடங்கள், நவீன எரிவாயு மயானம், ஆழ்துளை கிணறுகள், 10 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள், கண்மாய்கள் புனரமைப்பு, நிழற்குடைகள் பணிகள் நிறைவுற்றுஉள்ளன. மண்டலம் 2ல் புதிய கட்டடங்கள், நவீன எரிவாயு மயானம், பூங்காக்கள் மேம்பாடு, குடிநீர் குழாய் மராமத்து பணிகள், வெங்காய மார்க்கெட்டிற்கான கட்டட வசதி என 1005 பணிகளும், மண்டலம் 3ல் புதிய ரோடுகள், பாதாளசாக்கடை மராமத்துப் பணிகள், மழைநீர்க் கால்வாய் துார்வாருதல் உட்பட 711 பணிகள் நடந்துள்ளன. மண்டலம் 4ல் ரோடுகள், கட்டடங்கள், ஆழ்துளை கிணறுகள், பாதாளசாக்கடை குழாய் மராமத்து என 549 பணிகளும் மண்டலம் 5ல் ரூ.4.39 கோடியில் நமக்கு நாமே திட்டப்பணிகள், ரூ.2.80 கோடியில் சிறு பாலங்கள் என 601 பணிகள் முடிந்துள்ளன.இதுதவிர ரூ.27.64 கோடியில் 'வெட்மிக்ஸ்' ரோடுகள், ரூ.37.20 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் என ரூ.316 கோடியில் 3,356 பணிகள் நடந்துவருகின்றன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி