உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

மழைநீர் செல்ல வழியில்லைமதுரை மாநகராட்சி 19 வார்டு தானத்தவம் புதுார் மாடக்குளம் கண்மாய் உபரிநீர் மற்றும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடை வசதியில்லாததால் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. நவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜயகுமார், தானத்தவம் புதுார்.ரோட்டில் சாக்கடை நீர்ஆத்திக்குளம் மாயத்தேவர் காலனியில் சாக்கடை கழிவுநீர் 2 மாதங்களாக ரோட்டில் ஓடுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சீனிவாசன், ஆத்திகுளம்.சாக்கடை மூடி சரிசெய்கமதுரை கல்லுாரி மேம்பாலத்தின் கீழ் ரோட்டில் சாக்கடை மூடி உடைந்து பல மாதங்களாகிறது. விபத்து நடப்பதற்கு முன்பாக தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநகராட்சியினர் முன்வர வேண்டும்.- கருணாநிதி, மதுரை.வாய்க்காலில் குவியும் குப்பைமாநகராட்சி 64, 65 வது வார்டு பகுதி கிருதுமால் நதி கால்வாயில் பல மாதங்களாக குப்பை நிறைந்துள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணன்,பெத்தானியபுரம்.ரோட்டில் கொட்டும் குப்பைமதுரை செல்லுார் 60 அடி ரோட்டின் அருகே குப்பை கொட்டுவதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத துர்நாற்றச் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினேஷ்பாண்டி, செல்லுார்.நாய்களால் தொல்லைமதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 1 முதல் 12 தெருக்களில் வெறிநாய்கள் உலா வருகின்றன. பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. சிறுவர்கள் விளையாட முடியவில்லை. விரட்டிக் கடிக்கும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், திருவள்ளுவர் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ