உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஒரு போன் போதுமே

 ஒரு போன் போதுமே

பஸ்சை காணோம் மதுரை வண்டியூர் பகுதியில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு சொற்ப அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்வோர் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்லும் நிலையுள்ளது. மகளிருக்கு இலவச பயணம் என்று கூறி பஸ்களையே இயக்காமல் இருப்பது தான் திராவிட மாடலா. - தங்கவேலு, வண்டியூர். குண்டும் குழியுமான ரோடு மதுரை சிறை அருகே தார் ரோடு அமைக்கும் பணி முழுமை பெறாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிகள் மட்டும் பரப்பப்பட்டுள்ளதால் டூவீலரில் செல்வோர் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் ரோடு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். - மானசிகாமணி. கரிமேடு. பஸ் ஸ்டாப்பை இடம் மாற்றுங்க மதுரை காளவாசல் ஜெயராம் பேக்கரி முன் பஸ்களை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தேனி ரோட்டில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிக்னல் கிடைத்தும் கடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. அப்பகுதி பஸ் ஸ்டாப்பை சிறிது துாரம் தள்ளி இடமாற்ற வேண்டும். - முத்து, எஸ்.எஸ்.காலனி. நிரம்பி வழியும் பாதாள சாக்கடை மதுரை பழங்காநத்தம் மீனாட்சி நகரில் பல நாட்களாக பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது அதன் மேற்பகுதியிலேயே ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை பிரச்னையை சரிசெய்து ரோடு அமைக்க வேண்டும். - சுரேந்தர், பழங்காநத்தம். தெருநாய் தொல்லை திருப்பாலை தாகூர் நகர் 7வது தெருவில் தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது. டூவீலரில் செல்வோரை துரத்திச் சென்று கடிப்பதால் விபத்தில் சிக்குகின்றனர். குழந்தைகள், பெண்கள் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரவணன், திருப்பாலை. ஆழ்ந்த உறக்கத்தில் தெருவிளக்கு மதுரை டி.வி.எஸ்., நகர் லட்சுமி ரோட்டில் உயர்கோபுர மின் விளக்கு, அமைக்கப்பட்ட முதல் 4 நாட்கள் மட்டும் பிரகாசித்து விட்டு தற்போது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் துயில் எழவில்லை. இருட்டில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருட்டு பயம் அதிகரித்துள்ளது. - பாலா, டி.வி.எஸ்., நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை