உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமையலறை இல்லாத பள்ளி

சமையலறை இல்லாத பள்ளி

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அச்சம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளியில் சமையலறை இல்லாததால் வகுப்பறை அருகே திறந்தவெளியில் சத்துணவு சமைக்கின்றனர். இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். சேதமடைந்த சமையலறை சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் அருகே தகர ெஷட்டில் பாதுகாப்பாற்ற முறையில் விறகு அடுப்பில் உணவு சமைத்தனர். சில நாட்களாக வகுப்பறை அருகே மாடி படிக்கட்டுக்கு கீழ் பாதுகாப்பற்ற சிறிய அறையில் சிலிண்டர் வைத்து சமைக்கின்றனர்.இதனால் உணவு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதென பெற்றோர் கருதுகின்றனர். புதிய சமையலறை கட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை