சிலம்பத்தில் மேலுார் மாணவர்கள் சாதனை
மேலுார்: மதுரையில் ஜி.ஆர்., மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி, இந்தியன் சிலம்பப் பள்ளி இணைந்து மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடத்தின. இதில் மேலுார் போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 56 பேர் வெற்றி பெற்றனர். பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், துணைப் பயிற்சியாளர்கள் சுவேதா, ஜெயக்குமார், பாலமுருகன், கார்த்திபன், சந்தோஷ் பாராட்டினர்.ஒற்றை, இரட்டை கம்பு சிலம்ப போட்டியில் இரண்டு முதல் பரிசு வென்றவர்கள் தரணிதரன், மோகித், தன்ஷிகா. முதல் பரிசு வென்ற மாணவர்கள் : பிரகதீஷ், வெற்றிமாறன், சிங்கு பாண்டி, பாலரஞ்சன், ஹரிஹரன், தமிழ்வாணன், தர்ஷன், வரதராஜன், கபில், பிரதுர்ஷன், ஸ்ரீ வர்ஷன், பெரிய கருப்பு, யாழினி நிரஞ்சனா, சம்யுக்தா, சுவேதா, லட்சுமி, ரோகினி, சஸ்வின். 2ம் பரிசு வென்ற மாணவர்கள் : ரூ பதர்ஷினி, தன்ஷிகா, சுபாஷினி, பட்டத்தரசி, லட்சுமி, புகழரசி, பிரவீன் சங்கர், கிருஷ்ணா, தனிஷ்மாறன், ரிஷிகிருஷ்ணா, சரவண ராம், மிதுன் ராஜ், அஸ்வின், கிருபாகரன், சுஷாந்த். 3ம் பரிசு வென்ற மாணவர்கள் : அதர்வா, நேசியன், ஜித்தேஷ்வரன், யோகேஷ் பாண்டி, தேவதர்ஷன், சந்தோஷ், ஹரிஹர ராஜன், திவாகர், பார்த்திபன், அருள்குமரன், ஹேமந்த் சங்கர், கவிப்ரியன், சங்கர கருப்பு முனீஸ், ஜேசிகா, செந்துாரான், வேணிகா, வர்ஷினி, சுவேதா, தேவ்தர்ஷன்.