உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்சி துவக்குவோரெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது: நடிகர் விஜய் மீது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாய்ச்சல்

கட்சி துவக்குவோரெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது: நடிகர் விஜய் மீது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாய்ச்சல்

அவனியாபுரம் : அரசியல்கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என நடிகர் விஜய் மீது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா அதிருப்தி தெரிவித்தார்.மதுரை அவனியாபுரம் அ.தி.மு.க., வடக்கு பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமையில் நடந்தது. திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.அவனியாபுரம் வடக்கு பகுதி செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது: தி.மு.க.,வின் 30 மாத ஆட்சியில் மக்களுக்கு வேதனைகள்தான் அதிகரித்துள்ளது. கொலைகள், கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. நிர்வாக திறமையற்றது தி.மு.க., அரசு. மதுரையில் நூலகம், ஜல்லிக்கட்டு மைதானம் மட்டுமே கட்டியுள்ளனர்.நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில்தான் கூட்டணி. தற்போது ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் பா.ஜ., பின்னால் ஓடுகின்றனர். அ.தி.மு.க. வலுவாக உள்ளது. லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். ஆனால் கொள்கைகளையும், திட்டங்களையும் அறிவிக்கவில்லை. கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரைப்போல் வெற்றி பெற முடியாது. நடிகர் விஜய் கட்சியால் தி.மு.க.,தான் பாதிக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி