உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிற்க முடியாத நிழற்குடை 

நிற்க முடியாத நிழற்குடை 

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மலைப்பட்டியில் இடியும் நிலையில் சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.மலைப்பட்டியைச் சேர்ந்த கோபால் கூறியதாவது: நிழற்குடை அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்டடத்தின் கூரை இடிந்து கம்பி தெரியும் நிலையில் உள்ளது.எப்போது வேண்டுமானாலும் நிழற்கூரை இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையில் நிற்க அஞ்சுகின்றனர்.இந்தப் பகுதியில் அடிக்கடி பஸ்கள் வருவதில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மக்கள் வெயில், மழையால் சிரமப்படுகின்றனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ