உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அண்ணாமலை

மதுரையில் அண்ணாமலை

அவனியாபுரம் : நேற்று முன்தினம் கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் செய்தியைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் கரூருக்கு சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி, காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக இலங்கைக்கு சென்ற தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தகவல் அறிந்ததும் தமிழகம் திரும்பினார். அடுத்த நொடியே விமானத்தில் நேரடியாக மதுரை வந்தார். மதியம் 2:30 மணிக்கு மதுரை வந்த அவரை நகர பா.ஜ., தலைவர் மாரிசக்ரவர்த்தி, அவரது ஆதரவு நிர்வாகிகள் விஷ்ணுபிரசாத், பாலாஜி உத்தமராமசாமி, பாலமுருகன், வேலுச்சாமி மற்றும் சில தொண்டர்கள் வரவேற்றனர். மதுரையில் இருந்து காரில் கரூர் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை