உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பருத்தி சாகுபடிக்கு விதை வாங்க போறீங்களா

பருத்தி சாகுபடிக்கு விதை வாங்க போறீங்களா

மதுரை: கோடையில் பருத்தி சாகுபடி செய்யும் போது விற்பனை பட்டியல் பெற்று விதைகளை வாங்க வேண்டும் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை துணை இயக்குநர் வாசுகி தெரிவித்துள்ளார்.டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, உசிலம்பட்டி, திருமங்கலம், சேடப்பட்டி வட்டார விவசாயிகள் ரக பருத்தி மற்றும் வீரிய ஒட்டுரக பருத்தி விதைகள் வாங்குவர். விதை பாக்கெட் விபர அட்டையில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். 2023 -- 24ம் ஆண்டிற்கான அனைத்து ரக, வீரிய ஒட்டு ரகத்தின் 475 கிராம் விதைகளுக்கு ரூ.853 என அரசு நிர்ணயம் செய்துள்ளது. விற்பனை பட்டியலை பெற்று தரமான விதைகள் வாங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ