வரி விதிப்பு முறைகேடு 4 பேர் ஜாமின் ஒத்திவைப்பு
மதுரை : மதுரை மாநகராட்சியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். புரோக்கர்களாக செயல்பட்ட முகமது நுார், சகா ஹூசைன், ராஜேஷ்குமார், மாநகராட்சி தற்காலிக ஊழியர் சதீஷ் கைதாகினர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆக.,20 ல் நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இவ்வழக்கில் கைதான மாநகராட்சி உதவி பொறியாளர் ரங்கராஜன், கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் கார்த்திக் மற்றும் கண்ணன், ரவி ஜாமின் மனுவை அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிபதி பி.வடமலை போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக செப்.,3க்கு ஒத்திவைத்தார்.