| ADDED : மார் 15, 2024 07:19 AM
மேலுார் : கீழவளவு ரேஷன் கடையில் பொருள் இருந்தும் வினியோகிக்க மறுப்பதாக விற்பனையாளர் மீது கார்டுதாரர்கள் புகார் செய்தனர்.கீழவளவில் செயல்படும் ரேஷன் கடையில் அம்மன் கோவில்பட்டி, கம்பர் மலைபட்டி, அடைஞ்சான் கண்மாய்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களின் 1,200 க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். இக்கடையில் பொருள் இருந்தும் மாதத்தின் இறுதிநாட்கள் வரை பொருட்களை வினியோகிக்காமல் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சமூக ஆர்வலர் சிவா கூறியதாவது : முழு நேரமாக செயல்படும் ரேஷன் கடையில் பொருட்கள் இருந்தும் 20ம் தேதிக்கு மேல் முன்னறிவிப்பின்றி வினியோகிக்கின்றனர். ஏராளமான கார்டுதாரர்கள் பொருள் வாங்க முடியாமல் போய்விடுகிறது. நேற்று கடையில் அரிசி இருந்தும், கூட்டம் அதிகமுள்ளதால் பொருள் வினியோகிக்க மறுத்ததால் கார்டுதாரர்கள் கடையை முற்றுகையிட்டனர். பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். வினியோக அலுவலர் பேசியும் பொருள் வழங்கவில்லை. எப்போதும் கேட்டாலும் கோதுமை இல்லை என்கின்றனர். கடையை ஆய்வு செய்து உரிய நாட்களில் முறையாக அறிவிப்பு செய்து பொருட்களை வினியோகிக்க வேண்டும்'' என்றனர்.டி.எஸ்.ஓ., நாகலெட்சுமி கூறுகையில், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.