உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வலிப்பு நோய்க்கு மூளையை பிரித்து ஆப்பரேஷன்; அப்போலோ மருத்துவர்கள் அரிய சாதனை

வலிப்பு நோய்க்கு மூளையை பிரித்து ஆப்பரேஷன்; அப்போலோ மருத்துவர்கள் அரிய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : வலிப்பு நோயால் பெரும் பாதிப்புக்குள்ளான சிறுமியின் மூளையில் அரிய ஆப்பரேஷன் செய்து மதுரை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சாதித்துள்ளனர்.மதுரை அப்போலோ மருத்துவமனை மூளை நரம்பியல் நிபுணர்கள் மீனாட்சி சுந்தரம், ஷ்யாம் கூறியதாவது: மூளையில் இருந்து தேவையற்ற நேரத்தில் கை, கால்களுக்கு மின்சாரம் செல்வதை வலிப்பாக அறிகிறோம். மூளையில் கட்டி, கிருமி, அடிபடுதல் போன்றவற்றால் வலிப்பு வரலாம். பாதிப்பில் உள்ளோரில் 70 சதவீதத்தினர் தினமும் ஒரு மாத்திரை,. 25 சதவீதம் பேர் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுப்பவராக இருக்கலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் ஆப்பரேஷன் தேவை.மதுரை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி வலிப்பு நோயால் தினமும் 10 முதல் 15 முறைகூட கீழே விழுந்து அடிபடுவார். இதனால் அச்சிறுமியின் எல்லா செயல்பாடுகளும் பாதித்தன. அப்போலோவுக்கு வந்த அவரை பரிசோதனை செய்ததில் ஆப்பரேஷன் தேவைப்பட்டது. அவரது மூளையின் இடது பகுதியில் இருந்து வலது பகுதிக்கு தேவையற்ற வகையில் 'மின்சாரம்' பாய்ந்ததால் பாதிப்பு இருந்தது. அவரது மூளையை 2 ஆக பிரிக்க முடிவு செய்தோம். அவருக்கு மயக்கமருந்து கொடுப்பது, ஆப்பரேஷனுக்கு பின் கை, கால் செயலிழப்பு, பேச்சு இழப்பு ஏற்படும் என்ற சவால்கள் இருந்தன. அவருக்கு 'கார்லஸ் கலாஸ்டோமி' என்ற 6 மணி நேர ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அதன்பின் 3 மாதங்களாக அவருக்கு வலிப்பு உட்பட எந்த பாதிப்பும் இல்லை.வலிப்பு வரும் கால இடைவெளி, மாத்திரை அளவை குறைப்பதுகூட சிறப்பான சிகிச்சையே. இச்சிறுமிக்கு மீண்டும் வலிப்பு வரவில்லை என்பதால் குணமடைந்ததாக கொள்ளலாம். வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்றனர்.நிகழ்ச்சியில் அப்பல்லோ தலைமை செயல் அலுவலர் நீலகண்ணன், இணை இயக்குனர் பிரவீன்ராஜன், டாக்டர்கள் கார்த்திக், சுந்தரராஜன், நிஷா, கெவின், பொதுமேலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kundalakesi
பிப் 22, 2024 16:45

Cost and insurance details please


babusrinivasan
பிப் 22, 2024 16:17

இதில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்களுக்கும் ஏன் இதய பூர்வமான வாழ்துக்கள் வாழ்க வளமுடன்


Barakat Ali
பிப் 22, 2024 14:39

இதெல்லாம் என்னங்க சாதனை ?? திராவிட மாடல் தமிழர்களின் மூளையை அறுபது ஆண்டுகளாக மழுங்கடித்து வருகிறதே ??? அவர்களின் சம்மதத்துடனேயே ......


Raa
பிப் 22, 2024 11:38

மருத்துவர்களுக்கு நன்றி. குழந்தை பூரண நலம் பெயரை கடவுளை பிரார்த்திக்கிறோம்.


duruvasar
பிப் 22, 2024 09:27

இறைவன் அருளுடன் அந்த குழந்தை நல்ல உடல் வளத்துடன் பல்லாண்டு வாழ வணங்குகிறோம்.


Naga Subramanian
பிப் 22, 2024 09:23

மிகவும் அருமையான செய்தி. தினமலருக்கு நன்றி இந்த மாதிரியான சிகிச்சை ஏழைகளுக்கு மற்றும் பொருளாதார வசதியற்ற மக்களுக்கு பயன்படுமாயின் மிகவும் நல்லது.


வீர தமிழன்
பிப் 22, 2024 08:30

தினமலர் தவிர இம்மாதிரியான செய்திகளை வேறு எந்த ஊடகமும் மக்களுக்கு தெரிவிப்பது இல்லை. மிக்க நன்றி


Barakat Ali
பிப் 22, 2024 15:30

இது ஒரு வகையில் டாக்கர்களுக்கு, மருத்துவமனைக்கு விளம்பரம் ........ ஏழைகள் என்பதால் ரிஸ்க் எடுத்து ஒப்புக்கொண்டார்கள் அல்லது ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டார்கள் .......


Columbus
பிப் 22, 2024 08:13

Super. Vazhthugal. Reading such ve news in the morning is truly refreshing. ????????????????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை