உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருச்செந்துார் கோயில் நிலத்தை மயானமாக பயன்படுத்துவதை தடுக்க வழக்கு: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்துார் கோயில் நிலத்தை மயானமாக பயன்படுத்துவதை தடுக்க வழக்கு: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்செந்துார் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மயானமாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், மாற்று இடம் தேர்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயஅச்சம்பாடு, இட்டமொழியில் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர். இது சட்டவிரோதம். தடுக்க நடவடிக்கை கோரி அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், திருநெல்வேலி கலெக்டர், திசையன்விளை தாசில்தார், கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு:திசையன்விளை தாசில்தார், 'மயானத்திற்கு ஒதுக்க மாற்றாக அரசு புறம்போக்கு நிலம் அல்லது நந்தம் நிலம் இல்லை. கோயிலுக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவு நிலத்தை ஒதுக்க வேண்டும்,' என கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கோயில் நிர்வாகம், 'அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு மயானத்திற்கு இடம் ஒதுக்கலாம். கோயில் நிலத்தை மயானத்திற்கு ஒதுக்க முடியாது,' என தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற உரிய இடத்தில் மட்டுமே மயானம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கோயில் நிர்வாகத்துடன் ஆலோசித்து மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை