உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்வளத்தை பெருக்க மாட்டுக் கிடை; ஒருநாள் கட்டணம் ரூ.4500

மண்வளத்தை பெருக்க மாட்டுக் கிடை; ஒருநாள் கட்டணம் ரூ.4500

திருமங்கலம்: திருமங்கலம் பகுதிகளில் வயல், தோட்டங்களில் மண் வளத்தை பெருக்க மாட்டுக்கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இப்பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை முடிவடைந்து சில இடங்களில் மூன்றாம் போக நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் வசதி இல்லாததால் இரண்டு போகத்தோடு இந்தாண்டிற்கான விவசாயத்தை நிறுத்திய விவசாயிகள் தங்களது நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதற்காக ஆடு, மாட்டு கிடைகளை அமைத்து வருகின்றனர்.200 முதல் 300க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்ட கிடைக்கு ஒரு நாள் வயல்வெளியில் அல்லது தோட்டத்தில் தங்க ரூ. 4500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாடுகள் மூலம் வெளியேற்றப்படும் கோமியம், சாணம் போன்றவை மண்ணுக்குமுக்கிய உரமாக மாறுகிறது.மேலும் ஒரே இடத்தில்நுாற்றுக்கணக்கான மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடும்போது தேவையில்லாத களைச்செடிகள், புற்கள், ஏற்கனவே விவசாயம் செய்யப்பட்ட பயிர்களின் கழிவுகள் போன்றவை மாடுகளுக்கு உணவாக பயன்படுகிறது. இதன் மூலம் அதை அப்புறப்படுத்தும் செலவும் குறைகிறது. எனவே திருமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் ஆட்டுக்கிடை மாட்டுக் கிடை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி