உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் கிடைத்தது வகுப்பறை

தினமலர் செய்தியால் கிடைத்தது வகுப்பறை

எழுமலை: எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் பழுதடைந்ததால் 2024 ல், இடிக்கப்பட்டது. கடந்தாண்டு மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்தனர். இதுபற்றி தினமலர் நாளிதழில் கடந்தாண்டு ஆகஸ்டில் செய்தி வெளியானது. இதையடுத்து 8 வகுப்பறைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. கடந்தாண்டு அக்டோபரில் பணிகள் துவங்கி, பணிகள் முடிந்து நேற்று எம்.எல்.ஏ., விஜய் தலைமையில் திறப்பு விழா நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இத்துடன் டி.கிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறை, சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடங்களை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை