உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிப்.12ல் பேரையூரில் ரேஷன் கடைகள் அடைப்பு

பிப்.12ல் பேரையூரில் ரேஷன் கடைகள் அடைப்பு

மதுரை, : பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை எடுப்பதற்காக ஜன.,7ல் பேரையூர் தாசில்தார் அலுவலகம் சென்ற பெருங்காமநல்லுார் ரேஷன் கடை விற்பனையாளர் பாண்டியை தேர்தல்தாசில்தார் வீரமுருகன் தாக்கியதாக புகார் எழுந்தது.ஒருமாதமாகியும்அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பிப்.,12ல் பேரையூரில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன், தலைவர் ராஜா, நிர்வாகிகள் கணேசன், திருச்சிற்றம்பலம், பாரூக் அலி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை