உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பு

கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதியில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு பின் எஞ்சிய தட்டைகளை கால்நடை தீவனத்திற்காக விவசாயிகள் சேகரித்து வருகின்றனர்.பேரையூர் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சோளம், கம்பு, மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் சோளம், கம்பு, மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராக இருந்தபோது தொடர் மழையினால் பாதிப்பு ஏற்படுத்தியது.இதனால் இவற்றை தீவனத்திற்கு மட்டுமே பயன்படுத்தும்நிலை ஏற்பட்டது.இவற்றின் தோகைகள், தட்டைகள் கால்நடைதீவனமாக பயன்படுவதால் விவசாயிகள் அவற்றை இருப்பு வைக்க துவங்கி உள்ளனர். பசுமாடுகள் அதிகம் வளர்க்கும் விவசாயிகள் தட்டைகளை விலைக்கு வாங்குகின்றனர்.அதனை கோடைகால தீவனத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.செயற்கைத் தீவனங்கள் விலை உயர்வை சமாளிக்க இயற்கை தீவனங்கள் கிடைக்கும் போது வாங்கி இருப்பில் வைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்