கிராமிய கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு
மதுரை: சமீபத்தில் டில்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர்கள் நுாறு பேர் பங்கேற்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரையில் இருந்து கோவிந்தராஜ் தலைமையில் சென்றிருந்த நுாறு கலைஞர்களும் இந்தியா கேட் பகுதியில் தலையில் கரகத்துடன், வீரநடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.இந்நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சி முடிந்து மதுரை திரும்பிய கலைஞர்களை மதுரை கலெக்டர் சங்கீதா சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அதேபோல டில்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவர்களையும் கலெக்டர் பாராட்டினார்.