உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை: தேர்தல் பணிகள் துவக்கம்

 மதுரையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை: தேர்தல் பணிகள் துவக்கம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து நேற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இதில் நேர்முக உதவியாளர் ரங்கநாதன், தேர்தல் தாசில்தார் இளமுருகன், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நாளை (டிச.11) முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் துவங்க உள்ளன. இதில் மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன. இந்த இயந்திரங்களில் பதிவானவற்றை அழித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சரிபார்க்க உள்ளனர். பழுதடைந்த இயந்திரங்களை தனியாக எடுத்து வைத்து சரி செய்ய உள்ளனர். இப்பணிக்காக பெங்களூரு 'பெல்' நிறுவன ஊழியர்கள் வர உள்ளனர். இப்பணிகளை கட்சி பிரதிநிதிகள் பார்வையிடலாம் என்ற விவரங்களை அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து காந்திமியூசியம் அருகே தேர்தல் கமிஷன் கோடவுனில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்கள், வி.வி.பேட்., இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை