உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவு ரேஷன் விற்பனையாளர்கள் சம்பளத் தொகை போக வர சரியா போகுதே ! விருப்பப்பட்டியல் கேட்டும் விரும்பாத இடத்தில் நியமனம்

கூட்டுறவு ரேஷன் விற்பனையாளர்கள் சம்பளத் தொகை போக வர சரியா போகுதே ! விருப்பப்பட்டியல் கேட்டும் விரும்பாத இடத்தில் நியமனம்

மதுரை : எந்த இடத்தில் வேலை வேண்டும் என விருப்பப்பட்டியல் கேட்டும் விரும்பாத துாரத்திற்கு தங்களை பணி நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் (டாக்பியா) புலம்புகின்றனர்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மதுரையில் ரேஷன் கடை விற்பனையாளர்களாக 2021 ல் 155 பேரும் 2023 ல் 178 பேரும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இவர்களுக்கு மாதம் ரூ.6000 வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. காலை 9:00 மணிக்கு கடையை திறக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது எந்த பகுதியில் பணி செய்ய விருப்பம் என விருப்ப பட்டியல் கேட்டு வாங்கினர். ஆனால் பணி நியமனத்தின் போது பல கி.மீ., தொலைவிற்கு அப்பால் உள்ள கடைகளுக்கு அனுப்பப்பட்டனர்.இப்பணியாளர்கள் கூறியதாவது: தொலைதுார கிராமங்களுக்கு காலை 7:00 மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டியுள்ளது. இரண்டு பஸ்கள் மாறிச் சென்றால்தான் சரியான நேரத்தில் கடை திறக்க முடியும். எல்லா இடங்களுக்கும் அரசு (மகளிர் இலவச) பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோவுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்காகவே ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகை செலவாகிறது. சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு போக்குவரத்திற்கே சரியாகி விடுகிறது. ஆண்கள் டூவீலரில் வருவதால் பெட்ரோலுக்கு அதிகம் செலவழிக்கின்றனர்.பெரும்பாலான கடைகளில் கழிப்பறை வசதியில்லை. அவசரத்திற்கு அருகிலுள்ள வீடுகளை நாட வேண்டியுள்ளது. கிராமப்புற வீடுகளில் அந்த வசதியும் இல்லாததால், திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிஉள்ளது. நாளிதழில் இதற்கு முன் செய்தி வந்தபோது எத்தனை கடைகளில் கழிப்பறை இல்லை என கண்துடைப்பாக கணக்கெடுத்தனர். ஆனால் கழிப்பறை மட்டும் கட்டவில்லை. அருகிலுள்ள கடைகளில் நியமனம் செய்தால் வாங்கும் சம்பளத்தில் துண்டு விழாது. கழிப்பறை வசதியும் செய்து தரவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை