உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஊராட்சி, ஒன்றியங்களை பிரிக்க வளர்ச்சித்துறையில் எதிர்பார்ப்பு

 ஊராட்சி, ஒன்றியங்களை பிரிக்க வளர்ச்சித்துறையில் எதிர்பார்ப்பு

மதுரை: 'பெரிய ஒன்றியங்கள், ஊராட்சிகளை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என' தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், செல்லப்பாண்டியன், செந்தில்குமார் கூறியதாவது: ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். கிராம ஊராட்சியில் பணியாற்றும் செயலாளர்களுக்கு தேர்வு, சிறப்பு நிலை ஊதியம், கருவூலம் மூலம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். துாய்மைக் காவலர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வி.பி.ஆர்.சி., பி.எல்.எப்., கணக்காளர்களுக்கும் தனிநிதிஒதுக்கீடு செய்தும், கணினி இயக்குவோருக்கும் மாதச்சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். துாய்மைப் பணியளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கு வதுடன், காலியிடங்களை நிரப்ப வேண்டும். சுகாதார திட்டத்தில் பணியாற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒன்றியங்களிலும் புதிதாக ஒரு பி.டி.ஓ., பணியிடம் உருவாக்க வேண்டும். பெரிய ஒன்றியங்கள், ஊராட்சிகளை பிரித்து புதிதாக ஒன்றியங்கள், ஊராட்சிகள் உருவாக்க வேண்டும் உட்பட 12 அம்சங்களை வலியுறுத்தி வருகிறோம். அரசு நிறைவேற்றாத நிலையில் சென்னையில் டிச.19 ல் கவன ஈர்ப்புப் பேரணி நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை