உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி அதிகாரிகள் பதவிகளுக்கு நேரடி நியமனம் தலைமையாசிரியர்கள் தீர்மானம்

கல்வி அதிகாரிகள் பதவிகளுக்கு நேரடி நியமனம் தலைமையாசிரியர்கள் தீர்மானம்

மதுரை, : 'கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமனத்தில் உள்ளது போல் இயக்குநர், சி.இ.ஓ.,க்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் முறை பின்பற்ற வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மதுரையில் இச்சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் தலைவர் அன்பரசன் தலைமையில் நடந்தது. திருச்சி மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்றார். பொதுச் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் இளங்கோ, அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர்கள் சாமிசத்தியமூர்த்தி, பீட்டர் ராஜா, சட்ட செயலாளர் கண்ணன், மதுரை மாவட்ட தலைவர் தென்கரைமுத்துப்பிள்ளை, கள்ளர் சீரமைப்பு மாவட்ட தலைவர் சின்னப்பாண்டி, மகளிரணி அமைப்பாளர் பாக்கியசித்ரா பங்கேற்றனர்.1.1.2018 க்கு பின் பதவி உயர்வு பெற்ற உயர்நிலை தலைமையாசிரியருக்கு பணிநிலை, பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படுத்த கூடாது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். கள்ளர், ஆதிதிராவிடர்நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வியுடன் இணைக்க வேண்டும். 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு பதிலாக பதிலி ஆசிரியை நியமிக்க வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி 40 சதவீதம் உயர்நிலை, 35 சதவீதம் மேல்நிலை தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு மூலம், 25 சதவீதம் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். இதே விகிதத்தில் சி.இ.ஓ., இணை இயக்குநர், இயக்குநர் பதவி உயர்வுகளிலும் பின்பற்ற வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ