உள்ளூர் செய்திகள்

கலந்துரையாடல்

மதுரை: மதுரை வாசகர் வட்டம் சார்பில் 'படித்ததில் பிடித்தது' கலந்துரையாடல் நிகழ்ச்சி கே.புதுார் அல்அமீன் பள்ளியில் நடந்தது. முதுகலை ஆசிரியர் சதாசிவம் வரவேற்றார். அமைப்பாளர் சண்முகவேலு தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பேராசிரியர் அனார்கலி, 'கவிஞர் க.வேழவேந்தன் படைப்புலகம்' நுால் பற்றியும், கவிஞர் ரா.ரவி, 'வேப்பந்தோப்பில் விரிந்த வள்ளுவம்' என்ற நுால் குறித்தும், ஆசிரியர் திருஞானசம்பந்தம், 'தேசாந்திரி' என்ற நுால் பற்றியும், அரசுப் பணியாளர் பாரதி, 'கவனிக்கப்படாத காவியப்பூக்கள்' என்ற நுால் பற்றியும் பேசினர்.இதில் கவிஞர் சுந்தரபாண்டியன், மருத்துவர் முருகேசன், பல்கலை மாணவர் தேவராஜ்பாண்டியன், தமிழார்வலர் பிரியதர்ஷினி உட்பட பலர் பேசினர். வாசகர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை