உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாவட்ட பளுதுாக்கும் போட்டி

 மாவட்ட பளுதுாக்கும் போட்டி

மதுரை: மதுரை மாவட்ட பளு துாக்கும் சங்கம் சார்பில் சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளின் கீழ் பளு துாக்கும் போட்டி மதுரை நீதிராஜன் பாரதி பள்ளியில் நடந்தது. சங்கத்தலைவர் நீதிசேகர் தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் விளையாட்டு வீரர் கபீர், வீரா குழும நிறுவனர் இளங்குமரன், சங்க பொருளாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) பயிற்றுநர் மார்க்ஸ் லெனின் முன்னிலை வகித்தனர். 10 உடற்பயிற்சிப் பள்ளிகளின் 80 பேர் பங்கேற்றனர். போட்டி முடிவுகள் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் லோகராம்ஜி, 60 கிலோ பிரிவில் யோகராஜ், விக்னேஷ் பாண்டியன், 65 கிலோ பிரிவில் வெங்கடேஷ், அகமது அப்துல் அஜீஸ், 71 கிலோ பிரிவில் கோடீஸ்வரன், சஞ்சய், 73 கிலோ பிரிவில் சபரிநாதன், 79 கிலோ பிரிவில் மகேஷ் பாண்டியன், விஷ்ணுகுமார், 88 கிலோ பிரிவில் செல்வ மணிகண்டன், 94 கிலோ பிரிவில் அமர்நாத், 110 கிலோ பிரிவில் ஆகாஷ் கீர்த்தி, 110க்கு மேல் உள்ள பிரிவில் சக்திபிரணவ் முதலிடம் பெற்றனர். மகளிர் 44 கிலோ பிரிவில் ஆனந்தலட்சுமி, 48 கிலோ பிரிவில் சாதனா, 58 கிலோ பிரிவில் தன்னிஷ்தா, அனுஷ் பிரீத்தி, 63 கிலோ பிரிவில் சவுபர்னிகா, 69 கிலோ பிரிவில் நிஷாமா, அரிதா, 77 கிலோ பிரிவில் வெரோனிகா, 86 கிலோ பிரிவில் ராஜகுமாரி, 86 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் பூஜா, சிவரஞ்சனி முதலிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் நவ. 28 முதல் 30 வரை நாகர்கோவிலில் நடக்க உள்ள மாநில பளு துாக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 20 வயதுக்குட்பட்ட ஆடவர் ஜூனியர் பளு துாக்கும் போட்டியின் 69 கிலோ எடைப் பிரிவில் எஸ்.டி.ஏ.டி., வீரர் எம்.யோகராஜ் சினாட்சு 90 கிலோ, கிளின் அன்ட் ஜெர்க்கில் 118 கிலோ (மொத்தம் 208 கிலோ) எடை துாக்கி சிறந்த பளு தூக்கும் வீரருக்கான அண்ணாபத்தி எஸ். வரதராஜன் சுழற்கோப்பையை வென்றார். சிறந்த வீரர் தேர்வு ஆடவர் சீனியர் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் சவுராஷ்டிரா சிலம்ப தேகப் பயிற்சிப் பள்ளி மாணவர் கே. சக்திபிரணவ் அதிகபட்சமாக 280 கிலோ (130 பிளஸ் 150) எடை துாக்கி சிறந்த வீரராகத் தேர்வானார். மகளிர் போட்டியின் 86 கிலோ எடைப் பிரிவில் லேடிடோக் கல்லுாரியின் எஸ்.பூஜா அதிகபட்சமாக 163 கிலோ (70 பிளஸ் 93) எடை துாக்கி சாதனை படைத்தார். 239 புள்ளிகளைப் பெற்ற உல்ப் பேக் பளு துாக்கும் மையம் ஹெர்குலஸ் ராஜாராம் நினைவுக் கோப்பையைக் கைப்பற்றியது. சவுராஷ்டிரா சிலம்பப்பள்ளி 195 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது. மகளிர் பிரிவில் 181 புள்ளிகளைப் பெற்ற எஸ்.டி.ஏ.டி., யின் ஸ்டார் அகாடமி அணி சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது. லேடிடோக் கல்லுாரி இரண்டாமிடம் பெற்றது. நடுவர்களாக சந்திரசேகரன், ஆனந்தகுமார், பாலாஜி செயல்பட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் பரிசு வழங்கினார். சங்கச் செயலாளர் பா. ஆனந்தகுமார், துணைத்தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சிவநாத், ராஜேஷ்குமார், மோகன்ராம் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி