மேலும் செய்திகள்
குறுவட்ட தடகளம்: கள்ளர் பள்ளி சாதனை
29-Jul-2025
எழுமலை : எழுமலையில் நடந்த டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் பிரிவில் எழுமலை பாரதியார் பள்ளியும், மாணவியர் பிரிவில் அத்தி பட்டி ராமையாநாடார் பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றன. எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்திய இப்போட்டிகள் எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரி யர் ஜீவா வரவேற்றார். பாரதியார் பள்ளித் தாளார் பொன்கருணாநிதி, முதல்வர் ஆறுமுகசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் எழுமலை விஸ்வ வித்யாலயா மாணவர் சரவணவேல், டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஷ்வரா பள்ளி மாணவர் சக்திகுரு ஆகியோர் தலா 8 புள்ளிகள் எடுத்து தனிநபர் சாம்பியன் பெற்றனர். மாணவியர்கள் பிரிவில் டி.குன்னத்துார் அரசு பள்ளி மாணவி முத்துபாண்டீஸ்வரி, எழுமலை விஸ்வவித்யாலயா மாணவி தான்யாஸ்ரீ, அத்திபட்டி ராமையாநாடார் பள்ளி மாணவி பூமிகாதேவி ஆகியோர் தலா 10 புள்ளிகள் எடுத்து தனிநபர் சாம்பியன் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவர் பிரவீன்குமார் மற்றும் மாணவியர் பிரிவில் டி.கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹன்சிகா ஆகியோர் தலா 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம் பியன் பெற்றனர். 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துப்பாண்டி, டி.கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி சர்மிதா ஆகியோர் தலா 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பெற்றனர். போட்டிகளை எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டி ஒருங்கிணைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ஜெய சீலன் நன்றி கூறினார்.
29-Jul-2025