உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் மயானம் கோரிக்கை மனு

மின் மயானம் கோரிக்கை மனு

திருநகர்: திருப்பரங்குன்றம், திருநகர், எஸ்.ஆர்.வி. நகர் பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் மாநகராட்சி சிறப்பு முகாம் திருநகர் கவுன்சிலர் அலுவலகத்தில் நடந்தது. கவுன்சிலர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். உதவி பொறியாளர் ராமசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் திருமால் மனுக்கள் பெற்றனர். மின் மயானம் அமைக்க கோரி மக்கள் மனுக்கள் அளித்தனர். சுந்தர் நகர் திருநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் 95வது வார்டு பகுதியில் ரோடுகளை சீரமைக்கவும், சேமட்டான்குளம் பகுதியில் குப்பை, கழிவுகளை அகற்றவும், பாண்டியன் நகர் பூங்காவை சீரமைக்கவும், அப்பகுதியில் மாநகராட்சி பள்ளி ஏற்படுத்தவும் வலியுறுத்தி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை