| ADDED : டிச 29, 2025 05:18 AM
மதுரை: 'மின்வணிகம் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களில் சான்று பெற்ற எலக்ட்ரீசியன்களை அவசியம் நியமிக்க வேண்டும்'' என, மதுரையில் நடந்த மின்அமைப்பாளர சங்க ஆண்டுவிழாவில் வலியுறுத்தினர். மதுரையில் தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் மதுரை கிளை சார்பில் ஆண்டு விழா தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆதிஸ்வரன், பொருளாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் அபுதாஹீர் வரவேற்றார். கிளை பொருளாளர் பாலாஜி வரவு செலவு தாக்கல் செய்தார். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், கொள்கை பரப்பு செயலாளர் நாகேஸ்வரன், அமைப்புச் செயலாளர் யோகநாதன் உட்பட பலர் பேசினர். துணைத் தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். கிளை துணைத் தலைவர் சதீஷ்கண்ணன், துணைச் செயலாளர் பூமிநாதன், செயற்குழு உறுப்பினர் கோபிநாதன் பரிசு பொருட்களை வழங்கினர். கூட்டத்தில் உரிமம் வழங்கும் வாரியம், லைசென்ஸ் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து எலக்ட்ரீசியன்களும் சங்கத்தில் இணைந்து, தொழிலாளர் நலவாரியத்தில் இடம்பெற முயற்சிக்க வேண்டும், மதுரையில் ஐ.டி.ஐ., படித்து முடிக்கும் அனைவரும் சங்கத்தில் இணைய வேண்டும். அனைத்து மின்வணிக நிறுவனங்களில் சான்று பெற்ற ஒரு எலக்ட்ரீசியன் அவசியம் இருக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைத் துணைத் தலைவர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.