உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எழுத்தறிவு திட்டத்தில் 934 மையங்களில் தேர்வு

எழுத்தறிவு திட்டத்தில் 934 மையங்களில் தேர்வு

மதுரை : மதுரையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் 934 மையங்களில் 16 ஆயிரத்து 984 பேர் தேர்வு எழுதினர்.பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் இயக்ககம் சார்பில் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத 1 6 ஆயிரத்து 984 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு ஆறு மாதங்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.இவர்களுக்கான தேர்வு 934 மையங்களில் நடந்தன. 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன. 3 மணிநேரம் தேர்வு எழுதினர். திட்ட இயக்குநர் நாகராஜமுருகன் கிழக்கு ஒன்றியத்தில் காளிகாப்பான், இலங்கியேந்தல், மேலுார் ஒன்றியத்தில் தெற்காமூர், திருவாதவூர், டி.மாணிக்கம்பட்டி உள்ளிட்ட மையங்களை பார்வையிட்டார்.சி.இ.ஓ., கார்த்திகா தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, உதவி திட்ட அலுவலர்கள் சரவணமுருகன், கார்மேகம், டி.இ.ஓ.,க்கள் மையங்களை கண்காணித்தனர். இதற்கான முடிவுகள் 2 மாதங்களில் வெளியாகவுள்ளன. இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 19 முதல் 23 வரை மதுரையில் நடக்கின்றன. இதில் தேர்வு பெறுவோருக்கு மத்திய அரசின் திறந்தவெளிப் பள்ளி மூலம் இணையவழிச் சான்றுகள் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !