மேலும் செய்திகள்
ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை
14-Jul-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் மழைப்பொழிவு கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக மழைப்பொழிவு கொஞ்சமும் இல்லாமல் இருந்தது. இதனால் மானாவாரி விவசாயிகளின் ஆடிப்பட்ட விதைப்பு தள்ளிப் போனது. ஆக.9 இரவு 7:00 மணிமுதல் 9: 00 மணி வரை உசிலம்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஒரே நாளில் 9 செ.மீ., மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. இது ஆடிப்பட்ட விதைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. நேற்று மாலையும் 3:00 மணி முதல் தொடர் சாரலாக பெய்வதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
14-Jul-2025