உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழை பெய்தும் கோடை உழவில் ஆர்வம் இல்லாத விவசாயிகள்

மழை பெய்தும் கோடை உழவில் ஆர்வம் இல்லாத விவசாயிகள்

திருப்பரங்குன்றம்:' திருப்பரங்குன்றம் பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வந்தாலும் கோடை உழவுப்பணிகளை துவக்க மானாவாரி விவசாயிகள் ஆர்வமில்லாமல் உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ''வழக்கமாக கோடைக்கு முன்பு மழை பெய்தால் உழவு செய்வோம். ஆடி 18 அன்று நடவு செய்ய விதை நெல், காய்கறிகள் விதைகள் வாங்கி வைத்து தயாராக இருப்போம். மழை பெய்யவில்லை என்றால் ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் உள்ளோர் மட்டும் நெல், காய்கறிகள் பயிரிடுவோம்.இந்தாண்டு சமீப நாட்களாக மழை பெய்கிறது. இருந்தாலும் விவசாயம் செய்ய போவதில்லை. கடந்தாண்டு சீசனில் நெல் நடவு செய்தோம்.முறையாக பராமரித்தும் ஏனோ போதிய விளைச்சல் இன்றி, பெரும் நஷ்டம் அடைந்தோம்.இந்தாண்டு காய்கறிகளின் விலையும் கடுமையாக சரிந்துவிட்டது.இதனால் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளோம். காய்களை பறிக்காமல், பராமரிக்காமல் விட்டு விட்டோம். இந்தாண்டும் நஷ்டம் அடைய முடியாது.தற்போதைய மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.காலியிடங்களில் புல் முளைக்கும். இதன் மூலம் கால்நடை தீவன செலவு வெகுவாக குறையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை