உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளந்தலைமுறையினர் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் அறிவுரை

இளந்தலைமுறையினர் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் அறிவுரை

திருப்பரங்குன்றம்: 'இளம் தலைமுறையினர் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் பங்கேற்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் பேசினார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர், தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், துணைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். உடல் கல்வி இயக்குனர் ராகவன் வரவேற்றார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமிருதா ஸ்ரீகாந்த் பேசியதாவது: விளையாட்டு என்பது பொழுதுபோக்கு அல்ல. அது மனிதனின் புத்தி கூர்மையையும், உடல் ஆரோக்கியத்தின் மகத்துவத்தையும் பிரதிபலிக்கும். விளையாட்டுகள் மூலம் இன்றைய தலைமுறையினர் தங்களது பங்களிப்பை நிலைநாட்டி தமிழகம், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தங்களை தயார் படுத்த வேண்டும். விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தமிழக அரசும், இந்திய அரசும் பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. அவற்றை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு சான்றாக இளைஞர்கள் செயல்பட வேண்டும். இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். கல்லுாரிகள், மாவட்ட, மாநில போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் ரஞ்சித் குமார் தொகுத்துரைத்தார். கல்லுாரி கிரிக்கெட் வீரர் சந்தோஷ் குரு கிருஷ்ணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை