உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச வேப்ப மரக்கன்றுகள்

இலவச வேப்ப மரக்கன்றுகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதி விவசாயிகளுக்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச வேப்ப மரக்கன்று வழங்கப்படுகிறது.ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 200 மரக்கன்றுகளும், விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கருக்கு கன்றுகளும் வழங்கப்படுகின்றன. வரப்பு ஓரங்களில் நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 60 கன்றுகளும், அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். திருநகர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரில் அறியலாம் என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !