உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் நிதி ஒதுக்கீடு

 தினமலர் செய்தியால் நிதி ஒதுக்கீடு

மேலுார்: அழகர் மலை அடிவாரம் கேசம்பட்டியில் 1969 ல் பெரிய அருவி நீர் தேக்கம் அமைக்கப்பட்டது. அருவி நிரம்பினால் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஆனால் நீர்வளத் துறையினர் பராமரிக்காததாலும், தனிநபர்கள் ஆக்கிரமிப்பாலும் குறைந்த அளவு தண்ணீரையே தேக்க முடிந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பெரிய அருவி, அருவியால் பயன்பெறும் கண்மாயை பராமரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கினார். அதனால் மகிழ்ந்த விவசாயிகள் தினமலர், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை