உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனை அபாய கட்டடங்கள்

அரசு மருத்துவமனை அபாய கட்டடங்கள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த பணியாளர் குடியிருப்புகள், குடிநீர் தொட்டி போன்றவற்றால் விபத்து அபாயம் உள்ளது. 1960களில் இருந்து செயல்படும் இம்மருத்துவமனையில் பணியாளர்களுக்கான 8 குடியிருப்புகள் 1980 களில் கட்டப்பட்டது. அதில் 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்றவை பராமரிப்பின்றி சேதமடைந்து விட்டது. புற நோயாளிகள் பிரிவு நுழைவுப் பகுதியில் உள்ள பழுதடைந்த கட்டடம், கழிப்பறை கட்டடத்தின் மேல் மாடித்தோட்டம் போல் அரச மரங்கள் 10 அடிக்கு மேல் வளர்ந்துள்ளன. இதன் அருகே தான் மருந்து வாங்குவதற்கு நோயாளிகள் காத்திருக்கின்றனர். இக்கட்டங்கள் விரிசல் விட்டு அச்சுறுத்துகின்றன. அபாய கட்டடங்களை அகற்றி புதிய குடியிருப்புகளை கட்ட மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை