உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருக்களின் விபரம் கணினியில் பதிவேற்றம் செய்வது எப்போது; மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

தெருக்களின் விபரம் கணினியில் பதிவேற்றம் செய்வது எப்போது; மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள 8098 தெருக்களின் விபரங்களை கணினியில் எவ்வளவு காலவரம்பிற்குள் பதிவேற்றம் செய்யப்படும் என்பது குறித்து தெளிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை தேசிகாச்சாரி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாநகராட்சி 2011க்கு முன் 72 வார்டுகளாக இருந்தது. பின் புறநகரின் சில உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக விரிவடைந்தது. இதன்படி 3806 தெருக்கள் நிர்ணயிக்கப்பட்டன. தெருக்களின் தரம் வாரியாக சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. வார்டுகள் 2022 ல் மறுவரையறை செய்யப்பட்டன. அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 8098 தெருக்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. 100 வார்டுகளுக்கும் ஒரே சீராக வரி விதிக்கும் முடிவிற்கு மாறாக 3806 தெருக்களின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. சொத்து வரி விதிப்பில் மாறுபாடு நிலவுகிறது. பாதாளச் சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். 8098 தெருக்களையும் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்தெருக்களுக்கு 2022 ல் செய்த சீராய்வு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தெருக்களின் விபரங்கள் எவ்வளவு கால வரம்பிற்குள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் விபரம் பெற்று அதன் தரப்பு வழக்கறிஞர் நவ.13ல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
அக் 26, 2025 22:38

அது இன்னும் கால தாமதமாகும் என்றே நம்புகிறோம். ஏனென்றால் தெரு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதே. தெரு பெயரில் உள்ள ஜாதி பெயர் நீக்கப்படவேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது கனம் கோர்ட்டார் அவர்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை