மேலும் செய்திகள்
மத நல்லிணக்க கூட்டம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
06-Mar-2025
மதுரை : வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை மாவட்டம் கொக்குளம் கண்ணன் தாக்கல் செய்த மனு:புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தனர். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு: வேங்கைவயலில் இருவரிடையே ஏற்பட்ட பிரச்னையால் சம்பவம் நடந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சிலரிடம் அலைபேசிகளை கைப்பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, குற்றவாளிகள் யார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நேற்று நீதிபதி எம்.நிர்மல் குமார்: அனுமதி மறுத்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
06-Mar-2025